உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பிறப்பால் யாரும் முதல்வர் ஆகவில்லை; இது மக்களின் முடிவு | Udhayanidhi | Deputy CM

பிறப்பால் யாரும் முதல்வர் ஆகவில்லை; இது மக்களின் முடிவு | Udhayanidhi | Deputy CM

பிறப்பால் யாரும் முதல்வர் ஆகவில்லை; இது மக்களின் முடிவு | Udhayanidhi | Deputy CM | React for Vijay speech | Vellore | சென்னையில் விகடன் குழுமம் சார்பில் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திமுகவையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்தார். கூட்டணிகளை நம்பி 200 தொகுதிகள் வெல்வோம் என இருமாப்புடன் எகத்தாளம் பேசும் ஆட்சியாளர்களின் கூட்டணி கணக்கை 2026ல் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர் என்றார். அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட கலந்து கொள்ள முடியாத அளவிற்கு திருமாவளவனுக்கு கூட்டணி கட்சிகள் தரப்பில் எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது என்றும் விஜய் கூறி இருந்தார். விஜய்யின் இந்த பேச்சு அரசியல் களத்தில் அனலை கிளப்பி உள்ள நிலையில், அவரது கருத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என திருமாவளவன் பதில் அளித்தார். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்கக்கூடிய அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்றும் தெளிவுபடுத்தினார். இந்நிலையில் வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த துணை முதல்வர் உதயநிதியிடம் விஜயின் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, நான் சினிமா செய்திகளை பார்ப்பதில்லை என பதில் அளித்தார். அதே நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜூனா, பிறப்பால் ஒரு முதல்வர் உருவாக்கப்பட கூடாது என்றார். அது பற்றிய கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, யார் இங்கே பிறப்பால் முதல்வர் ஆனது.. மக்கள் தேர்ந்தெடுத்து தான் முதல்வர் ஆனார். அந்த அறிவு கூட இல்ல அந்த ஆளுக்கு என்று காட்டமாக தெரிவித்தார்.

டிச 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !