பொறுமையாக இருக்க பொதுச்செயலர் அட்வைஸ் | TVK | Congress | Vijay | Rahul
பொறுமையாக இருக்க பொதுச்செயலர் அட்வைஸ் | TVK | Congress | Vijay | Rahul வரும் சட்டசபை தேர்தலில் தன் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு உண்டு என தவெக தலைவர் விஜய் அறிவித்தார். தொடர்ந்து திமுக - பா.ஜ கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என அக்கட்சி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த சூழலில் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலிடம், தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரகசியமாக பேசிய தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபாலை, தென் மாவட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் சந்தித்து பேசியுள்ளனர். திமுகவிடம் ஆட்சியில் பங்கு கேட்டாலும் கிடைக்காது. அதிக தொகுதிகளும் கிடைக்காது. இந்த முறை திமுகவுடன் கூட்டணி வைத்தால், 2029 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்ய தொண்டர்கள் இருக்க வாய்ப்பில்லை. ஆட்சி அதிகாரப்பகிர்வு காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தால் தான் கட்சியை வளர்க்க முடியும். அதற்கு தவெகவிடம் கூட்டணி வைத்து போட்டியிட வேண்டும். விஜய்க்கு தமிழகம் மட்டுமல்ல, கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். கேரளாவிலும் காங்கிரஸ் ஆட்சி அமைய வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் ராகுல் மும்முரமாக உள்ளார். அந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் தமிழகத்தில் கூட்டணி மாற்றம் குறித்து ஆலோசிக்கலாம். அதுவரை திமுக கூட்டணியில் பொறுமையாக இருக்க வேண்டும் என கே.சி.வேணுகோபால் கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.