பார்லிமென்டில் நிதி அமைச்சர் நிர்மலா அளித்த விளக்கம் | Nirmala Sitharaman | tax exemption
12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதித்தாலும் வரி விலக்கு! பட்ஜெட் தொடர்பாக ராஜ்யசபாவில் பேசிய ஆம் ஆத்மி எம்பி ராகவ் சட்டா, வருமான வரி விலக்கு அளிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார். 12 லட்சம் வரை வரி இல்லை என்றாலும், அதற்கு மேல் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நிர்ணயிக்கப்பட்ட வரி வரம்பின்படி முழு வரி செலுத்த வேண்டி இருக்கிறது. ஏற்கனவே அதிகரித்து வரும் ஜிஎஸ்டி வரியால், நடுத்தர வர்க்கத்தினர் நிதிசார்ந்த அழுத்தங்களை சந்திப்பதாகவும் அவர் ராகவ் கூறினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்பி ராகவ் தவறாக சொல்வதாக சுட்டிக்காட்டினார். 12 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் முழு வரி செலுத்த வேண்டியதில்லை என்று விளக்கம் அளித்தார்.