உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகார் பிரச்னையை கையில் எடுத்த எதிர்கட்சிகள்: பார்லியை முடக்க திட்டம் Operation Sindhoor | Parliam

பீகார் பிரச்னையை கையில் எடுத்த எதிர்கட்சிகள்: பார்லியை முடக்க திட்டம் Operation Sindhoor | Parliam

பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 21ம்தேதி துவங்கியது. சபை துவங்கிய நாள் முதலே பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை பற்றி விவாதிக்க கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பார்லியில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், தொடர்ந்து 3 நாட்கள் சபை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரஜிஜுவின் சமாதான முயற்சியும் தோல்வியில் முடிந்தது. ஆபரேஷன் சிந்துார் குறித்து விவாதிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்ட பிறகும் எதிக்கட்சிகள் சபையை முடக்கினர். இதையடுத்து, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா அனைத்து கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆபரேஷன் சிந்துார் குறித்து 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. நேற்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய விவாதம் லோக்சபாவில் துவங்கியது. ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை பற்றி ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு கட்சி எம்பிக்கள் உரையாற்றினர். தங்கள் தரப்பு கேள்விகளை முன்வைத்தனர். நள்ளிரவு வரை விவாதம் நீடித்தது. இன்று காலை பார்லிமென்ட்டுக்கு வந்த எதிர்க்கட்சி எம்பிக்கள், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் பிரச்னையை கைவிட்டு, பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட் வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் கமிஷன் மற்றும் அரசுக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தியபடி எதிர்க்கட்சி எம்பிக்கள், பீகார் வாக்காளர் திருத்த பணி பற்றி விவாதிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். பிரதமருக்கு எதிரான கேலிச் சித்திரங்களையும் கையில் ஏந்தியிருந்தனர். இதுவரை ஆபரேஷன் சிந்துார் பற்றி விவாதிக்க வேண்டும் எனக் கூறி வந்த எதிர்க்கட்சியினர், தற்போது அது பற்றி விவாதம் நடந்ததும், அடுத்த பிரச்னையை கையில் எடுத்துள்ளதாக பாஜ எம்பிக்கள் கூறினர்.

ஜூலை 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி