/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாகிஸ்தானை எரிச்சலூட்டிய TTP தலிபான்களின் பின்னணி pakistan taliban| TTP| Terror group| afghanistan
பாகிஸ்தானை எரிச்சலூட்டிய TTP தலிபான்களின் பின்னணி pakistan taliban| TTP| Terror group| afghanistan
பாகிஸ்தானின் ராணுவம், அண்டை நாடான ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து திடீரென தாக்குதல் நடத்தி இருக்கிறது. ஆப்கன் எல்லையில் பக்திகா மாகாணத்திற்கு உட்பட்ட மலைக்கிராமங்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுகள் வீசின. TTP எனப்படும் தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தினர் மறைவிடங்களை குறிவைத்தே இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்ததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
டிச 25, 2024