உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவை கதறவிட்ட அமித்ஷா ஆப்ரேஷன் Palanisamy Amit Shah meet | admk bjp alliance | Annamalai vs DMK

திமுகவை கதறவிட்ட அமித்ஷா ஆப்ரேஷன் Palanisamy Amit Shah meet | admk bjp alliance | Annamalai vs DMK

மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரையறை என பாஜ அரசின் திட்டங்களை எதிர்த்து அதிரடி அரசியல் செய்த திமுக திடீரென இடி விழுந்தது போல் இடிந்து நிற்கிறது. பரபரப்பாய் அரசியல் பேசிய திமுக தலைவர்களை எல்லாம் ஒருவிதமான பதைபதைப்பு நோய் ஆட்கொண்டு இருக்கிறது. திமுகவின் இவ்வளவு பதற்றத்துக்கும் அந்த டில்லி மீட்டிங் தான் காரணம். அமித்ஷாவும், பழனிசாமியும் அப்படி என்னவெல்லாம் பேசி இருப்பார்களோ... உண்மையிலேயே பாஜ, அதிமுக கூட்டணி வந்து விடுமோ... என்று பதற ஆரம்பித்து இருக்கின்றனர் திமுகவினர். அமித்ஷாவிடம் கூட்டணி பற்றி பேசவில்லை; தமிழகத்தின் நலனுக்கான கோரிக்கைகளையே வைத்ததாக பழனிசாமி சொன்னாலும், டில்லியில் இருந்து வரும் ஒவ்வொரு தகவலும் திமுகவை அதிர வைத்துள்ளது. அந்த வரிசையில், அதிமுக, பாஜ கூட்டணி உறுதியானதோடு, தொகுதி பங்கீடு வரை அமித்ஷா பேசி முடித்ததாக புதிய தகவல் வெளியாகி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, அமித்ஷா, பழனிசாமி சந்திப்பின் போது பெரும்பகுதி பேச்சு கூட்டணி பற்றியே நடந்து இருக்கிறது. பாஜ, அதிமுக கூட்டணிக்கு இரு தரப்பினரும் பரஸ்பரமாக ஒப்புக்கொண்டனர். அதிமுக சார்பில் சில நிபந்தனைகளை பழனிசாமி வைத்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தான் தலைமை என்றும், அதிமுகவிடம் அண்ணாமலை அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் தங்கள் நிபந்தனையை பழனிசாமி முன் வைத்தார்.

மார் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை