உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விரதம் முடிந்து திருமலைக்கு நடந்து சென்ற பவன் கல்யாண் Pawan Kalyan | TTD | Tirupathi laddu issue

விரதம் முடிந்து திருமலைக்கு நடந்து சென்ற பவன் கல்யாண் Pawan Kalyan | TTD | Tirupathi laddu issue

ஏழுமலையானை நம்புகிறேன் பவன் கல்யாண் மகள் சத்தியம்! உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்து திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாத லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பை கலந்து பெரிய பாவம் செய்து விட்டார்கள் எனக்கூறிய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், அதற்கு பரிகாரமாக 11 நாட்கள் கடும் விரதம் மேற்கொள்ள போவதாக அறிவித்தார். அதன்படியே 11 நாட்கள் விரதம் இருந்து கோயில் திருப்பணிகளை மேற்கொண்டார். விரதம் முடிந்து ஏழுமலையானை தரிசிக்க திருமலைக்கு அலிப்பிரி மலைப்பாதை வழியாக நடந்து வந்தார். அவருடன் அவரது மகள்கள் ஆத்யா மற்றும் பொலேனா அஞ்சனி கொனிடேலாவும் (Polena Anjani Konidela) வந்தனர். பவன் கல்யாணின் இளைய மகள் பொலேனா அஞ்சனி கொனிடேலா, கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேவஸ்தான அதிகாரிகள் கொண்டு வந்த உறுதிமொழி நம்பிக்கை பத்திரத்தில், ஏழுமலையான் மீதும் இந்து மதத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக கையெழுத்திட்டார். அவர் மைனர் என்பதால், அப்பாவாக பவன் கல்யாணும் அந்த ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

அக் 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி