டில்லியில் பாரதிக்கு பிரதமர் மோடி புகழாரம்! PM Modi | Bharatiyar Birth Anniversary | Book release
பாரதியின் வரிகளை தமிழில் பாடிய மோடி! மகாகவி பாரதியாரின் 143வது பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் பாரதியின் அனைத்து படைப்புகள் அடங்கிய தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பாரதியாரின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் அனைத்தையும், கால வரிசையில் பாரதி படைப்புகள் என்ற பெயரில் சீனி.விஸ்வநாதன் 23 தொகுதிகளாக தொகுத்துள்ளார். இதை பிரதமர் மோடி வெளியிட்டு பேசினார். பாரதியாரை நுாற்றாண்டு நாயகன் என புகழ்ந்த மோடி, அவரின் படைப்புகளில் சுதந்திர தாகம் நிறைந்திருந்தாக கூறினார். 39 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த பாரதியின் படைப்புகளை ஆராய அறிஞர்களுக்கு தங்கள் ஆயுள் காலம் போதாது எனவும் மோடி பாராட்டினார். தனது உரைக்கு இடையே பாரதியின் வரிகளை தமிழிலேயே பாடிய மோடி பாரதியின் படைப்புகளை தொகுத்த விஸ்வநாதனை பாராட்டினார்.