உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காங்கிரஸ் செய்யும் சதிக்கு மக்கள் சரியான பதிலடி | Pm modi | Bjp | Haryana | J&K | election results

காங்கிரஸ் செய்யும் சதிக்கு மக்கள் சரியான பதிலடி | Pm modi | Bjp | Haryana | J&K | election results

புதிய வரலாறு எழுதிய ஹரியானா மக்கள்! காங்கிரசுக்கு No Entry ஹரியானா, ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், டெல்லியில் பாஜ தலைமையகத்தில் நடந்த வெற்றி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கொண்டார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜவினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இன்று நவராத்திரியின் 6வது நாள். இந்த புனித நாளில் ஹரியானாவில் 3வது முறையாக தாமரை மலர்ந்துள்ளது. காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. இது இந்திய அரசியல் சாசனத்திற்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு தந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். அந்த மாநிலத்தில் ஒட்டு சதவீதத்தை கணக்கிட்டால் மிகப்பெரிய கட்சியாக பாஜ உருவெடுத்து உள்ளது. பொய் மூட்டைகளை விட வளர்ச்சிக்கான உத்தரவாதம் ஜெயித்து விட்டது. ஹரியானாவில் மக்கள் புதிய வரலாற்றை எழுதி உள்ளனர். முதல் முறையாக, 3வது முறையாக பாஜ ஆட்சி அமைக்க ஆசி வழங்கி இருக்கிறார்கள். கீதையின் நிலத்தில் உண்மை, வளர்ச்சி வென்றுள்ளது. காங்கிரஸ் கடைசியாக எந்த மாநிலத்தில் 2வது முறையாக ஆட்சி அமைத்தது? 2011ல் அசாமில் தொடர்ந்து 2வது முறை ஆட்சி அமைத்தனர். அதன் பிறகு காங்கிரசுக்கு மக்கள் நோ என்ட்ரி போர்டு வைத்துவிட்டனர். இந்திய சமுதாயத்தை பலவீனப்படுத்தி, அராஜகத்தை பரப்பி நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. விவசாயிகள், இளைஞர்கள், தலித்கள், ஓபிசி பிரிவினரை தூண்டிவிடும் வேலையை செய்தார்கள். காங்கிரசின் சதியை புரிந்து கொண்ட மக்கள் ஹரியானாவில் உரிய பதிலடி கொடுத்துள்ளனர்.

அக் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை