உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ச்சீ கேவலம்-ஆபாசம் பேசிய பொன்முடிக்கு கிழி dmk minister ponmudi video | bjp vs dmk | ponmudi speech

ச்சீ கேவலம்-ஆபாசம் பேசிய பொன்முடிக்கு கிழி dmk minister ponmudi video | bjp vs dmk | ponmudi speech

திமுக அமைச்சர் பொன்முடி ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்று இப்போது இணையத்தை உலுக்கிக்கொண்டு இருக்கிறது. அந்த வீடியோவில் விலை மாது பற்றிய ஒரு கதையை சொல்லி மிகவும் ஆபாசமான முறையில் பேசுகிறார். அது மட்டும் இல்லாமல், இந்துக்கள் புனித சின்னமாக நெற்றியில் அணியும் பட்டை, நாமத்தை மிகவும் ஆபாசமான விஷயங்களுடன் ஒப்பிட்டு பேசி அதிர்ச்சி கிளப்பி உள்ளார். அவரது பேச்சுக்கு இந்துக்கள், சமூக ஆர்வலர்கள், பாஜ, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ‛இப்படிப்பட்டவரா உயர் கல்வி துறை அமைச்சராக இருந்தார் என்றும் கிழிக்கின்றனர். பொன்முடியை உடனே பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். ‛இப்படி பேசும் நபரின் ரத்தத்தில் ஒவ்வொரு அணுவிலும் ஆபாசம், கேவலம், அறுவருப்பு இருக்கிறது என்று தான் பொருள். இவர் தமிழக அமைச்சராக இருப்பது சாபக்கேடு என்று பாஜ துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளுத்து வாங்கி உள்ளார்.

ஏப் 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ