காட்டாட்சி வந்து விடுமோன்னு மக்களுக்கு பயம் இருந்தது Polls were rigged| Prashant Kishor interview
பீகார் சட்டசபை தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக, அந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த ஜன் சுராஜ் கட்சி தலைவரும், முன்னாள் தேர்தல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோர் கூறினார். தேர்தல் பற்றி தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் அவர் மனம் திறந்தார். பீகார் சட்டசபை தேர்தலில் மோசடி நடந்து இருக்கிறது என்றாலும், அந்த குற்றச்சாட்டுக்கான எந்த ஆதரமும் இல்லை.தோல்வி எங்களை நொறுங்க செய்தது. பல மாதங்களாக ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தபோது, எனது குழுவினர் சேகரித்த கருத்துக்கணிப்புகளுடன் ஓட்டுப்பதிவுகள் ஓத்துப்போகவில்லை. சில வெல்ல முடியாத சக்திகள் இதில் விளையாடி இருக்கின்றன. மக்களிடம் அவ்வளவாக பிரபலம் ஆகாத கட்சிகள் கூட லட்சக்கணக்கில் ஓட்டுகளை பெற்றன. ஓட்டு பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்ததாக குரல் எழுப்புமாறு என்னை சிலர் கேட்கின்றனர். தோல்விக்கு பின் அவர்கள் சொல்வது இதைத்தான். ஆனால், அதற்கான ஆதாரங்கள் இல்லை. ஏதே தவறு நடந்து விட்டது என்பது மட்டும் புரிகிறது; ஆனால், அது என்னவென்றுதான் தெரியவில்லை என்று பிரசாந்த் கிஷோர் கூறினார். பீகாரில் சுயதொழில் தொடங்க பெண்களின் வங்கி கணக்கில் அரசு தலா 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செய்தது பற்றியும் பிரசாந்த் கிஷோர் குறை கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஓட்டுப்பதிவு வரை பெண்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இது முதல் தவணை மட்டுமே; 2 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி வழங்குவதாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்தனர். #PollStrategist #PrashantKishor #PkBrokeSilence #JanSurajParty #PrasanthKishorAccusesNDA #ReasonForEelectionDefeat