உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / தவெக மாநாடு சமயத்தில் தேமுதிக மாநாட்டை நினைவுபடுத்திய பிரேமலதா | Premalatha | DMDK | Madurai confere

தவெக மாநாடு சமயத்தில் தேமுதிக மாநாட்டை நினைவுபடுத்திய பிரேமலதா | Premalatha | DMDK | Madurai confere

தமிழகம் முழுதும் இன்று பரபரப்பாக பேசப்படும் ஒரே விஷயம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பற்றி தான். விஜய் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்புடன் அனைவரது பார்வையும் தவெக மாநாடு பக்கம் திரும்பி உள்ளது. விழுப்புரம் விக்கிரவாண்டி அடுத்த வி சாலையில் நடக்கும் மாநாட்டுக்கு தமிழகம் முழுதும் உள்ள மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், ரசிகர்கள் வாகனங்களில் அணி வகுத்து வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு மதுரை தேமுதிக முதல் மாநாடு என அக்கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா வான்டடாக வந்து விஜய்யை சீண்டியுள்ளார். மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சம் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது! உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்! மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர்! இந்த மாநாடு உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது! எனவும் பிரேமலதா பதிவிட்டுள்ளார்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை