தங்கைக்காக பிரசாரம் செய்த அண்ணன் ராகுல் |wayanad Bye election | Priyanka Nomination filed | congress
எனக்காக முதல் முறையாக ஓட்டு கேட்டு வந்திருக்கேன்! வயநாட்டில் பிரியங்கா வேட்புமனு தாக்கல் 2019 லோக்சபா தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் முதல் முறையாக போட்டியிட்டு சுமார் 4.31 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2024 தேர்தலில் வயநாடு மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். வயநாட்டில் சுமார் 3.64 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வென்றார். அதே போல ரேபரேலி தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றார். தேர்தலுக்கு பிறகு ரேபரேலி தொகுதி எம்.பி.யாக தொடர்ந்த ராகுல், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். வரும் நவம்பர் 13ல் வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. ராகுலின் தங்கையும் காங்கிரஸ் பொது செயலாளருமான பிரியங்கா போட்டியிடுகிறார். வேட்புமனுவை தாக்கல் செய்ய வயநாடு தொகுதியின் கல்பெட்டாவில் இருந்து பேரணியாக சென்ற பிரியங்கா வேட்பு மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காங்கிரஸ் எம்.பி. சோனியா உள்ளிட்டோரும் உடன் சென்றனர். என்ற இடத்தில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை பிரியங்கா இன்று காங்கிரஸ் தொண்டர்களுடன் ஊர்வலம் சென்றார். பின்னர் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.