பகவந்த் மானுக்கு என்னாச்சு கேள்வி கேட்கும் எதிர்கட்சிகள் Punjab Chief Minister| Bhagwant Singh Mann|
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங். வயது 50. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வலிமைமிக்க தலைவராக இருப்பவர். 2 முறை அக்கட்சி எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். 2022ல் நடந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது பகவந்த் மான் சிங் முதல்வர் பொறுப்பை ஏற்றார். ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நம்பிக்கையை பெற்ற பகவந்த் மான் சிங்கின் மிகப் பெரிய பலவீனம் மது. பகல் நேரத்திலேயே குடிப்பார், கண்ட இடங்களில் விழுவார் என்ற விமர்சனங்களும் அவர் மீது உண்டு. ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த பகவந்த் மானுக்கு 2 தினங்களுக்கு முன் உடல் நல குறைவு ஏற்பட்டது. பஞ்சாப் மொஹாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பகவந்த்மான் நுரையீரல் தமனியில் வீக்கம் உள்ளது. இது அவருடைய இதயத்தை பாதிக்கிறது. ரத்த அழுத்தங்களிலும் மாறுதல்களை உண்டாக்குகின்றன. அவரது உடல் நிலையை புரிந்துகொள்ள தேவையான பரிசோதனைகள் இன்னும் நடத்தவில்லை. அதே சமயம் சிகிச்சைக்குப் பின் இப்போது அவரது உடல் நலம் சீராக உள்ளது என மருத்துவ அறிக்கை தெரிவித்தது. முன்னதாக, பஞ்சாப் சிரோமணி அகாலிதளம் கட்சித் தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா, முதல்வர் பகவந்த் மான் சிங் உடல் நலம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். பஞ்சாப் முதல்வர் அதிக குடி பழக்கம் உள்ளவர். ஓவர் குடியால் தீவிர கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல்வரின் உடல்நிலை பற்றி மக்கள் தெரிந்துகொள்ள உரிமை உள்ளது.