மணிப்பூரில் என்ன நடக்குது? 2 நாள் தங்கினால் தெரியும் | Rahul | Manipur | PM Modi | BJP | Congress
மணிப்பூரில் ராகுல் மோடிக்கு கோரிக்கை அசாம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 24 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 78 பேர் பலியாகினர். 269 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில் அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் இன்று சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் சென்ற ராகுல், இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மணிப்பூர் ராஜ்பவனில் கவர்னர் அனுசுயா உய்கேயை சந்தித்தார். பின்னர் ராகுல் கூறியதாவது: பிரதமர் மோடி, மணிப்பூருக்கு நேரில் வருவது அவசியம் என நினைக்கிறேன். இங்கு என்ன நடக்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.