ரஜினி பேச்சின் உண்மை பின்னணி-பரபரப்பு தகவல் | Rajini vs Duraimurugan | Annamalai-Seeman-udhayanidhi
குதூகலமா இருந்த வீட்ல இப்டி கும்மி அடிச்சிட்டு போய்டிங்களே சார்னு உடன் பிறப்புங்க பக்கம் திடீர்னு குமுறல் சத்தம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிச்சி விட்ட நியூ ஸ்டூடன்ட், ஓல்ட் ஸ்டூடன்ட் கதை தான் திமுகல இப்ப பத்தி எரிஞ்சிக்கிட்டு இருக்கு. கொஞ்ச நாளா அமைதியா போய்க்கிட்டு இருந்த தமிழக அரசியல் களத்துல பெரிய பூகம்பத்தையே ரஜினி உண்டு பண்ணிட்டாருனு தான் சொல்லனும். ரஜினி பேச்சுக்கு அண்ணாமலை, தமிழிசை, சீமான்னு கட்சி தலைவருங்கலாம் தங்கள் அரசியலுக்கு ஏற்ப அர்த்தம் சொல்லிட்டு இருக்காங்க. இன்னொரு பக்கம், எப்டியோ நம்ம ரூட்ட சூப்பர் ஸ்டார் கிளியர் பண்ணிட்டாருனு உச்சக்கட்ட மகிழ்ச்சில இருக்காராம் முதல்வர் மகன் உதயநிதி. ரஜினி கொளுத்திப்போட்ட விஷயம் எப்படிலாம் உருவெடுத்து இருக்குங்கிறத இப்ப பாக்கலாம். ஏ.வ.வேலு எழுதுன கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழால ஸ்டாலின், மூத்த அமைச்சருங்க, உதயநிதி, மற்ற உடன் பிறப்புங்க முன்னாடி மேடையில கலகலப்பா பேசுனாரு ரஜினி. அப்ப தான் தனக்கே உரிய ஸ்டைல்ல நியூ ஸ்டூடன்ட், ஓல்ட் ஸ்டூடன்ட் கதைய சொல்லி அரங்கத்தையே தெறிக்க விட்டாரு. நியூ ஸ்டூடன்டலாம் சமாளிக்கிறது ஆசிரியருக்கு ரொம்ப ஈசி. ஆனா இந்த ஓல்டு ஸ்டூடன்டஸ் இருக்காங்க பாருங்க...னு கலகலப்பா ஆரம்பிச்சி, கிளாச விட்டு போமாட்டேனு அடம்பிடிக்கிறாங்கனு போற போக்குல கொளுத்தி போட்டுட்டாரு. அதுலயும் என்ன பியூட்டினா, வழக்கமா thug life பண்ற துரைமுருகன வச்சே thug life பண்ணி பட்டைய கிளப்பி இருந்தாரு ரஜினி.