நீண்ட போராட்டத்துக்கு பின் தரைமட்டமான வீடுகள் | Removal of encroachment | 7 Homes | Highways road
திருவண்ணாமலை திண்டிவனம் சாலை சோ.கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தில் 1966ல் 39 வீடுகளுக்கு பட்டா கொடுக்கப்பட்டது. இதில் ஏழு வீடுகளின் பட்டாவை ஏ.ரிஜிஸ்டர் எனும் பட்டியலில் வருவாய்த்துறையினர் பதியாமல் விட்டுள்ளனர். இத்தனை ஆண்டுகள் கழித்து, அந்த வீடுகள் நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறி காலி செய்ய நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. நோட்டீஸ் வழங்கி 4 மாதங்களாகவும் வீட்டை காலி செய்யாததால் வியாழனன்று நெஞ்சாலை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். வீடுகளை இடிக்க விடாமல் 7 பேர் குடும்பமும் சாலை மறியல் செய்தனர். ஜேசிபி வாகனத்தை முன்னேற விடாமல் உருண்டு புரண்டு அழுதனர். (பிரத்) போராடியவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று அப்புறப்படுத்தினர். பின்னர் 4 ஜேசிபி மூலம் ஏழு வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.