உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சஞ்சய் மல்கோத்ரா கடந்து வந்த பாதை | Revenue Secretary Sanjay Malhotra | RBI Governor | Shaktikanta

சஞ்சய் மல்கோத்ரா கடந்து வந்த பாதை | Revenue Secretary Sanjay Malhotra | RBI Governor | Shaktikanta

ஆர்பிஐ புதிய கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா இந்திய ரிசர்வ் வங்கி கவர்னராக சக்திகாந்த தாஸ் உள்ளார். இவர் 2018 டிசம்பர் 12ல் பதவி ஏற்றார். மூன்றாண்டுகளுக்கு பிறகு அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. நாளையுடன் அவருடைய பதவிக் காலம் முடிவதால், மத்திய வருவாய்த் துறை செயலாளராக உள்ள சஞ்சய் மல்கோத்ரா, ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். வரும் 11ம் தேதி புதிய கவர்னராக பதவி ஏற்க உள்ள மல்கோத்ரா மூன்று ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சஞ்சய் மல்கோத்ரா, கான்பூர் ஐ.ஐ.டி.யில் கம்ப்யூட்டர் துறையில் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பப்ளிக் பாலிசி பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்.

டிச 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை