/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே திமுக மீது பரபரப்பு புகார் | RS | Dr. M. Thambidurai's Remarks
கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே திமுக மீது பரபரப்பு புகார் | RS | Dr. M. Thambidurai's Remarks
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 21 வரை ஒரு மாத காலம் நடக்கிறது. முதல்நாளில் ராஜ்யசபாவில் பேசிய அதிமுக எம்.பி தம்பிதுரை, தமிழகத்தில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்கள் வழியாக போதைபொருள் நடமாட்டம் அதிரித்துள்ளது. சென்னை போதை பொருள் புழக்கத்தின் மையமாக திகழ்கிறது. மாநிலத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதை ஆளும் திமுக அரசு ஊக்குவிக்கிறது. வேறு பொருட்கள் பெயரில் போதை பொருட்கள் உள்ளே வருவதை மாநில அரசு தடுக்க தவறிவிட்டது. போதை பொருள் எடுப்பவர்கள் எண்ணிக்கை அதிரித்திருப்பதால் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஜூலை 21, 2025