தனது ஸ்டைலில் திமுகவை சல்லி சல்லியாக்கிய அண்ணாமலை | Rupees symbol | ரூ vs ₹ | Annamalai vs Stalin
ரூபாய் சிம்பலில் திமுக அரசியல் தூள் தூளாக்கிய அண்ணாமலை! ஸ்டாலினே எதிர்பார்க்காத பாஜவின் அதிரடி அஸ்திரம் அடுத்த நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தமிழக அரசின் பட்ஜெட் 936 இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இதற்கிடையே பட்ஜெட் லோகோ வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தி இருக்கிறது. லோகோவில் வழக்கமாக இடம்பெறும் ரூபாய் சிம்பலுக்கு பதில் ரூ என்ற எழுத்து இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வரையும் திமுகவையும் அண்ணாமலை கடுமையாக தாக்கி உள்ளார். அவரது அறிக்கை: தமிழக அரசிட் பட்ஜெட் லோகோவில் ரூபாய் சிம்பல் நீக்கப்பட்டுள்ளது. இந்தியாவே ஏற்றுக்கொண்ட ரூபாய்க்கான சிம்பலை உருவாக்கியவர் ஒரு தமிழர். அதுவும் முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகன் உதயகுமார். அப்படிப்பட்ட சிம்பலையே நீக்கி இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவு தான் முட்டாளாக மாறுவீர்கள் ஸ்டாலின் என்று அண்ணாமலை கிடுக்கிப்பிடி போட்டுள்ளார். அண்ணாமலை சொல்வது போல் ரூபாய் சிம்பலை உருவாக்கி மொத்த இந்தியாவுக்கும் உலக அரங்கில் கவுரவத்தை ஏற்படுத்தி தந்த உதயகுமார் ஒரு பச்சை தமிழர். இத்தனைக்கும் அவரது குடும்பம் திமுக பின்னணி கொண்டது. முன்னாள் திமுக எம்எல்ஏ தர்மலிங்கம் தான் உதயகுமாரின் தந்தை. ரூபாய் சிம்பலை உதயகுமார் உருவாக்கியதே சுவாரஸ்யமானது. அமெரிக்காவின் டாலர், ஐரோப்பாவின் யூரோவுக்கெல்லாம் சிம்பல் இருப்பது போல் நம் ரூபாய்க்கும் சிம்பல் வேண்டும் என்று மத்திய அரசு விரும்பியது. இதற்காக 2009ல் ஒரு போட்டியை அறிவித்தது. 3000க்கும் மேற்பட்டவர்கள் போட்டியில் பங்கேற்று ரூபாய்க்கான டிசைனை வடிவமைத்தனர். அத்தனை பேரின் டிசைனையும் ஆய்வு செய்த மத்திய அரசு இறுதியில் உதயகுமார் வடிவமைத்த சிம்பலை தேர்வு செய்தது. 2010ல் இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டது. அன்று முதல் மொத்த இந்தியாவும் ரூபாய்க்கான சிம்பலை ஏற்றுக்கொண்டது. இப்போது உலக வர்த்தகத்திலும் ரூபாயை குறிக்க அதே சிம்பல் தான் பயன்படுத்தப்படுகிறது. இந்திய மொழிகளை எழுத உதவும் தேவநாகரி என்ற எழுத்து முறையில் வரும் ‛ரா என்ற எழுத்தை பயன்படுத்தி ரூபாய் சின்னத்தை உருவாக்கி இருந்தார். இவ்வளவு பெருமைக்கும் சொந்தக்காரரான உதயகுமாரின் சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மரூர் என்ற கிராமம். டிசைனிங்கில் ஆர்வம் கொண்ட உதயகுமார் சென்னை அண்ணா பல்கலையில் பி.ஆர்க் படித்தார். பின்னர் மும்பை ஐஐடியில் தொழில் வடிவமைப்பு பிரிவில் விசுவல் கம்யூனிகேஷனில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் பிஎச்டியும் முடித்தார். பின்னர் ஐஐடியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். இந்தியாவின் பொருளாதார வரலாற்றை எழுதும் போது எப்படி ரூபாய் சிம்பலை தவிர்க்க முடியதோ, அப்படி தான் உதயகுமார் பெயரையும் விட முடியாது. இந்தி திணிப்பு கோஷத்தை முன்னெடுத்து அரசியல் செய்து வரும் திமுக, தங்களது தமிழ் பற்றை ரூபாய் சிம்பலில் காட்டி இருக்கிறது. ரூபாய் சிம்பலை வைத்து திமுக செய்ய நினைத்த அரசியலில், திமுகவையே சிக்க வைத்து விட்டார் என்கிறது பாஜ வட்டாரம்.