உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மண்ணை கவ்விய நகராட்சி தலைவர் | sankarankovil municipality | DMK |

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மண்ணை கவ்விய நகராட்சி தலைவர் | sankarankovil municipality | DMK |

சங்கரன்கோவில் திமுகவில் மோதல் நகராட்சி பெண் தலைவர் பதவி காலி எதிர்ப்பு 28 ஆதரவு 0 தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி திமுக வசம் உள்ளது. நகராட்சி தலைவராக திமுகவை சேர்ந்த உமா மகேஸ்வரி பதவி வகித்து வந்தார். வார்டுகளில் வளர்ச்சிப்பணிகளை செய்வதில்லை என உமா மகேஸ்வரி மீது அனைத்து கட்சி கவுன்சிலர்களும் குறறம்சாட்டினர். இதனால் மாதம்தோறும் நகர மன்ற கூட்டத்தையும் கூட்டாமல் இருந்தார் உமா மகேஸ்வரி. இதனால் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டு மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் தலைவர் உமா மகேஸ்வரி மீது திமுக, அதிமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, 2 மாதங்களுக்குள் கூட்டம் நடத்தி தீர்மானங்களை நிறைவேற்ற உமா மகேஸ்வரிக்கு நகராட்சி நிர்வாக துறை கெடு விதித்தது. அப்போதும் உமா மகேஸ்வரி நகராட்சி கூட்டத்தை கூட்டவில்லை. இதனால் உமா மகேஸ்வரி மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. நகராட்சி கமிஷனர் நடராஜன் முன்னிலையில் இன்று காலை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள். 28 கவுன்சிலர்கள் ஓட்டெடுப்பில் கலந்து கொண்டனர். நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக அதாவது உமா மகேஸ்வரிக்கு எதிராக 28 கவுன்சிலர்களும் ஓட்டு போட்டனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றதாக கமிஷனர் நடராஜன் அறிவித்தார். இதன்மூலம் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரியின் தலைவர் பதவி பறிபோனது. கார்டு திமுக - 7 அதிமுக - 12 மதிமுக- 2 காங்- 1 சுயே- 5 SDBI- 1 தனக்கு எதிராக ஓட்டெடுப்பு நடக்கிறது என்பதால், இன்றைய கூட்டத்துக்கு உமா மகேஸ்வரி வரவில்லை. அவரது ஆதரவு திமுக கவுன்சிலர் விஜயகுமார் கூட்டத்துக்க வந்தபோதும் ஓட்டுபோடவில்லை. தனக்கு ஆதரவாக ஒருவர்கூட ஓட்டுபோடாத பரிதாப நிலையில் தலைவர் பதவியை உமா மகேஸ்வரி பறிகொடுத்தார். 2022ல் நகராட்சித் தேர்தல் நடந்த சமயத்தில் அதிமுக திமுக இரண்டு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவுடன் நகராட்சியை தன்வசமாக்கியது திமுக. நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததால், சங்கரன்கோவில் எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான ராஜாவின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு உமா மகேஸ்வரி தேர்வானார். சங்கரன்கோவிலில் வசிக்கும் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் உமா மகேஸ்வரியை திமுக தலைமை தேர்வு செய்தது உமா மகேஸ்வரிக்கு எதிராக திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர்களே கிளம்பியதால், ராஜாவும் இந்த விவகாரத்தில் சமரச முயற்சி எடுக்கவில்லை. அவரும் கைவிட்ட நிலையில், தலைவர் பதவியை உமா மகேஸ்வரி இழந்துள்ளார். இது, சங்கரன்கோவில் திமுகவில் நிலவும் கோஷ்டி பூசலை காட்டுவதாக உள்ளது. அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் திமுக மற்றும் திமுக ஆதரவு கவுன்சிலர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்

ஜூலை 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ