உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து: அமைச்சர் திடீர் விசிட் | Sembarambakkam Lake

செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து: அமைச்சர் திடீர் விசிட் | Sembarambakkam Lake

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்யும் கனமழையால், சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த நீர்மட்ட உயரமான 24 அடியில், இப்போது 23 அடியை தாண்டியுள்ளது. மொத்த நீர் கொள்ளளவு 3.6 டிஎம்சி என்ற நிலையில், தற்போது 3.5 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால், ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,700 கனஅடியாக உள்ளது. பாதுகாப்பு காரணம் கருதி, ஏரிக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியை சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் அன்பரசன் ஆய்வு செய்தார்.

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !