உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஷாஹி ஜமா மசூதி முன்பு பெரிய கலவரம்-பரபரப்பு காட்சி | Shahi Jama Masjid case | UP Sambhal issue video

ஷாஹி ஜமா மசூதி முன்பு பெரிய கலவரம்-பரபரப்பு காட்சி | Shahi Jama Masjid case | UP Sambhal issue video

கோயிலை இடித்து விட்டு மசூதி? சர்வே குழுவை தடுக்க கலவரம்! உபியில் பதற்றம்-பரபரப்பு உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் Sambhal என்ற இடத்தில் ஷாஹி ஜமா மஸ்ஜித் Shahi Jama Masjid என்ற மசூதி உள்ளது. இங்கிருந்த இந்து கோயிலை இடித்து விட்டு தான் முகலாய பேரரசு காலத்தில் மசூதியை கட்டி இருக்கின்றனர் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. விஷ்ணு சங்கர் ஜெயின் என்ற சுப்ரீம் கோர்ட் வக்கீல் தான் இந்த வழக்கை தொடுத்தார். சம்பலில் ஹரி ஹர் இந்து கோயில் தான் இருந்தது. 1529ம் ஆண்டு ஆட்சி செய்த முகலாய மன்னர் அக்பர் அந்த கோயிலை இடித்து தள்ளினார். அதே இடத்தில் ஷாஹி ஜமா மஸ்ஜித் என்ற மசூதியை கட்டினார். ஏற்கனவே இருந்த இந்து கோயிலை மீட்டெடுக்க வேண்டும் என்று விஷ்ணு சங்கர் ஜெயின் கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சம்மந்தப்பட்ட மசூதியில் சர்வே நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மசூதி இருக்கும் பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. இன்று கோர்ட் உத்தரவுப்படி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பல் பகுதிக்கு சர்வே குழு வந்தது. அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் திரண்டனர். சர்வே குழுவினரை மசூதிக்குள் நுழைய விடாமல் தடுத்து கோஷம் போட்டனர். அவர்களுக்கும் போலீசுக்கும் இடையே கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

நவ 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை