காங்கிரசின் மதச்சார்பின்மையை தோலுரித்த எம்பி சாம்பவி Shambhavi Chaudhary| LJS (RV) | Shambhavi Speec
நாட்டின் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதையொட்டி, சமீபத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், இரு சபைகளிலும் சிறப்பு விவாதம் நடந்தது. லோக்சபாவில் நடந்த சிறப்பு விவாதத்தில் 14ம் தேதி, லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த இளம் எம்பி சாம்பவி சவுத்ரி, இட ஒதுக்கீடு, மதச்சார்பின்மை பற்றிய காங்கிரஸ் ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து பேசியது இப்போது வைரலாகி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்று முதல் முறை லோக்சபாவுக்கு வந்துள்ள பெண் எம்பியான எனக்கு பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. நாட்டின் அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட 75வது ஆண்டில், நான் எம்பியாக பதவியேற்றுக் கொண்டவள் என்பதில் பெருமை கொள்கிறேன். பீகாரை சேர்ந்த 25 வயது தலித் வகுப்பை சேர்ந்த பெண், எம்பியாக தேர்வாகி இங்கு பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டின் அரசியல் சாசனம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது. இங்கு எம்பிக்கள் பதவியேற்கும் போது, நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படமாட்டோம் என உறுதிமொழி ஏற்கிறோம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர்கள் அன்னிய சக்திகளுடன் கை கோர்த்து, நாட்டின் ஒற்றுமை, இறையாண்மைக்கு எதிராகவே எப்போதும் செயல்படுகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் எப்டிஐ (FDI) எனப்படும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளன. அதே சமயம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் எஸ்டிஐ (SDI) அதிகரித்துள்ளது. இதில் எஸ் என்பது என்ன என்று நான் நேரடியாக சொன்னால், இங்கு அமளி ஏற்படும். எனவே அதற்கான அர்த்தத்தை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.