/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இரண்டாக பிரிந்து ஓடிய ரயில்: பீதியில் உறைந்த பயணிகள் | Shivamogga Talaguppa Mysuru passenger train
இரண்டாக பிரிந்து ஓடிய ரயில்: பீதியில் உறைந்த பயணிகள் | Shivamogga Talaguppa Mysuru passenger train
கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டம், தலகுப்பா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புதனன்று பிற்பகல் 2:50க்கு, தலகுப்பா - மைசூரு ரயில் கிளம்பியது. மாலை 5 மணியளவில் ஷிவமொக்கா ஸ்டேஷன் அருகில் உள்ள துங்கா நதி ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ரயிலின் ஆறு பெட்டிகள் தனியே பிரிந்தன. எஞ்சிய 10 பெட்டிகள் இணைக்கப்பட்ட நிலையில் இன்ஜின் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது.
ஆக 07, 2025