/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பள்ளியில் முதலில் அடிப்படை வசதிகளை சரி செய்யுங்கள்: எஸ்.ஆர்.சேகர் SR Sekar | BJP Treasurer
பள்ளியில் முதலில் அடிப்படை வசதிகளை சரி செய்யுங்கள்: எஸ்.ஆர்.சேகர் SR Sekar | BJP Treasurer
தமிழக பாஜ பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிந்தி இல்லாமல் மூன்றாவது வேறு மொழியை பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை என்று சப்பை கட்டு கட்டுகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். உதயநிதி பாஷையில் சொல்ல வேண்டுமென்றால்... போதிய ஆசிரியர்களை நியமிக்க துப்பில்லை என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் மாநில அரசாங்கத்தின் கையாலாகாத தனத்தை மறைக்கத் தான் இந்த ஹிந்தி திணிப்பு டிராமா. ஹிந்தியே தேவையில்லை... தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற வேறு ஏதாவது மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுக்கட்டும் என்பதுதான் பாஜவின் நிலைப்பாடு.
பிப் 21, 2025