உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிக்க முடியாது! | Supreme Court | President Murmu

கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதிக்க முடியாது! | Supreme Court | President Murmu

ஜனாதிபதியின் 14 கேள்விகளும் சுப்ரீம் கோர்ட்டின் பதில்களும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருப்பதாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. விசாரித்த சுப்ரீம் கோர்ட் மசோதாக்கள் மீது மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என கவர்னர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு வரம்பு நிர்ணயித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு குறித்து, 14 கேள்விகளை எழுப்பி ஜனாதிபதி முர்மு, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தையே வழக்காக மாற்றி தலைமை நீதிபதி கவாய், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்தார். தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் எஸ்.சந்துர்கர் வழக்கை விசாரித்தனர். மசோதா மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கவர்னரின் 14 கேள்விகளுக்கும் பதில் கொடுத்து நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

நவ 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை