உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜய் கொடியேற்றிய நேரத்தில் வெளியான பிரேக்கிங் நியூஸ்! | Tamilaga vetri kazhagam | Viajy | Flag hoi

விஜய் கொடியேற்றிய நேரத்தில் வெளியான பிரேக்கிங் நியூஸ்! | Tamilaga vetri kazhagam | Viajy | Flag hoi

விஜய் கொடி ஏற்றும்போது ஒரே நேரத்தில் லைவ் கட்! பின்னணி என்ன? தமிழகத்தின் மிக பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஜய், சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் குதித்தது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்தது. அதுதொடர்பாக விமர்சனங்கள் வைத்தாலும், அவரது அரசியல் கட்சி வருகையை இளைஞர்கள், ரசிகர்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருந்தனர். எதிர்பார்த்தபடியே கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கினார் விஜய். செப்டம்பர் கடைசி வாரத்தில் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்துகிறார். அதற்கு பிறகு தொகுதி வாரியாக சுற்றுப்பயணம், மண்டல மாநாடுகள் என பெரிய திட்டமே வைத்திருக்கிறாராம். இந்த நிலையில் தான் தனது கட்சி கொடி, பாடலை நேற்று வெளியிட்டார். சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து அறிமுகம் செய்து வைத்தார் விஜய். மஞ்சள், சிவப்பு நிறங்களோடு இரண்டு யானைகளுக்கு நடுவே வாகை மலர் இடம் பெற்று இருப்பது போலவும் பச்சை நீல நட்சத்திரங்களும் அந்த கொடியில் உள்ளன. கட்சிக்கொடி வெளியான சில நிமிடங்களிலேயே சோசியல் மீடியாக்களில் அது வேகமாக பரவியது. அது ஸ்பெயின் நாட்டு கொடியை போல இருப்பதாகவும் கேரளா அரசின் சின்னத்தில் இருப்பது போல 2 யானைகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற நான் அடிச்சா தாங்க மாட்ட பாடலின் ரீமிக்ஸ் போல கட்சியின் பாடல் இருப்பதாகவும் விமர்சனங்கள் வந்தன. இன்னொரு பக்கம், தங்கள் கட்சியின் சின்னமான யானை சின்னத்தை விஜய் கட்சி கொடியில் பயன்படுத்தியதற்கு பகுஜன் சமாஜ் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியாக விஜய் தனது கட்சி கொடி, சின்னம் வெளியிட்டது முதல் இப்போது வரை பல்வேறு அரசியல் கட்சியினரும் தொடர்ந்து விமர்சனங்களை முன் வைக்கின்றனர்.

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை