உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இலங்கையை கண்டித்து மீனவர் காங்கிரஸ் களம் | tamilnadu fishermen issue | srilanka | Fishermen Congress

இலங்கையை கண்டித்து மீனவர் காங்கிரஸ் களம் | tamilnadu fishermen issue | srilanka | Fishermen Congress

தமிழக மீனவர்களை ரிலீஸ் செய்யும் வரை விடமாட்டோம்! தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. சமீபத்தில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலையுடன் டெல்லி சென்ற தமிழக மீனவர்கள் சங்க பிரதிநிதிகள், மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இப்பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர். அமைச்சரும் சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார். இச்சூழலில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, டெல்லியில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் இன்று போராட்டம் நடத்தியது. ஜன்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை இலங்கை அரசு விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ