உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வருத்தம் தெரிவித்ததால் தளவாய் சுந்தரத்திற்கு பதவி | Thalavai Sundaram | ADMK | Edappadi Palaniswami

வருத்தம் தெரிவித்ததால் தளவாய் சுந்தரத்திற்கு பதவி | Thalavai Sundaram | ADMK | Edappadi Palaniswami

பறிக்கப்பட்ட கட்சி பதவி 1 மாதம் கழித்து கிடைத்தது! மனம் இறங்கினார் இபிஎஸ் டிஸ்க்: வருத்தம் தெரிவித்ததால் தளவாய் சுந்தரத்திற்கு பதவி அதிமுகவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும், அமைப்பு செயலாளராகவும் இருந்தவர், தளவாய் சுந்தரம் எம்எல்ஏ. தமது தொகுதியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தது பெரும் சர்ச்சையானது. பாஜ உடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என கட்சி தலைமை அறிவித்த பிறகும் அவரது செயல் கட்சிக்குள் சர்ச்சையானது. அதிமுக கொள்கை குறிக்கோளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி, கடந்த அக்டோபர் 8ல் தளவாய் சுந்தரம் வகித்து வந்த கட்சி பதவிகளை தற்காலிகமாக பறித்தார் பொதுச்செயலாளர் பழனிசாமி. தளவாய் சுந்தரம் அசரவில்லை. என்னை நீக்கினால் அப்படியே கடந்து போக வேண்டியதுதான் என கூலாக கூறியிருந்தார்.

நவ 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி