உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அண்ணாமலை சொன்னது பற்றி கேட்டதால் திமுக எம்பி கோபம் TR balu Dmk MP | Annamalai vs TR balu | dmk

அண்ணாமலை சொன்னது பற்றி கேட்டதால் திமுக எம்பி கோபம் TR balu Dmk MP | Annamalai vs TR balu | dmk

பதில் சொல்ல முடியாது போயா டென்ஷன் ஆனார் டிஆர் பாலு! தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை 2023ல் டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுக முக்கிய பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அதில் திமுக எம்பி டிஆர் பாலு பற்றிய விவரங்களும் இருந்தன. தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக அண்ணாமலைக்கு எதிராக டிஆர் பாலு சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக இன்று அவர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். கடந்த ஜூலையில், வழக்கு விசாரணைக்கு அண்ணாமலை ஆஜர் ஆனார். டிஆர் பாலு வரவில்லை. அதை விமர்சித்து இருந்த அண்ணாமலை, சாராய அலை நடத்தும்போதும், இவருக்கு மட்டும் மத்திய அமைச்சர் பதவி தரமாட்டேன் என அப்போதைய பிரதமர் கூறியபோதும் போகாத மானம் டிஎம்கே பைல்ஸ் வெளியானதும் போய்விட்டதா? என அவரது மனசாட்சியே கேட்பதால், ஆஜராவதை டிஆர் பாலு தவிர்த்து வருகிறார் என கூறியிருந்தார். இது பற்றி டிஆர் பாலுவிடம் கேள்வி எழுப்பியபோது, அண்ணாமலை உங்களை அப்படி கேட்க சொன்னாரா? என கேட்டார். மொத்தம் 10ஆயிரம் கோடி சொத்துமதிப்பு எங்கிருந்து வந்தது என அண்ணாமலை கேள்வி எழுப்பியது குறித்து கேட்டபோது, பதில் சொல்ல முடியாது போயா என கோபத்தில் டிஆர் பாலு கூறினார்.

ஆக 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை