திருப்பதி லட்டு கலப்படம் மோடிக்கு ஜெகன் கடிதம் TTD| laddu issue| jagan | chandra babu
ஆந்திராவில் முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை ஏற்கனவே மறுத்திருந்த ஜெகன், இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் சந்திரபாபு ஒரு பொய்யர். பொறுப்பற்ற மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட அவரின் குற்றச்சாட்டு பக்தர்களின் மனதை புண்படுத்தி உள்ளது. திருமலை திருப்பதியின் புனிதத்தை கெடுக்கும் வகையில் இருக்கிறது. திருமலை வெங்கடேஸ்வர சுவாமிக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்பட்ட பொய்யால் பக்தர்களின் உணர்வுகள் புண்படும். பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும். திருமலை திருப்பதி தேவஸ்தான் சுயாதீன வாரியம். மத்திய அமைச்சர்கள், முதல்வர்களால் பரிந்துரை செய்யப்பட்டவர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது உள்ள உறுப்பினர்கள்களில் சிலர் பாஜவை சேர்ந்தவர்களாக உள்ளனர். திருமலை திருப்பதி கோயில் நிர்வாகத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரம் அறங்காவலர் குழுவுக்கு மட்டும் உள்ளது. அதன் நிர்வாகத்தில் மாநில அரசுக்கும் சிறிய பங்கு உள்ளது. கோயிலுக்குள் கொண்டுவரப்படும் நெய்யின் தரம் குறித்து பல சோதனைகள் நடத்தப்படுகின்றன. டெண்டர் விடுவதிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வக சோதனைகள் மற்றும் பலவகை சோதனைகளுக்கு பின்பே பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.