TVKனு சொல்ல ₹5000 கேட்டு பதிலடி கொடுத்த முதியவர் | TVK | General council meeting | Old man issue
கோவையில் இருந்து வந்தும் விஜயை பார்க்காமல் ஏமாற்றம் குமுறிய முதியவர் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. மண்டபத்திற்கு உள்ளே உரிய பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பாஸ் இல்லாதவர்கள் வெளியில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பொதுமக்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்று தெரியாமல் கோவையில் இருந்து வந்திருந்த முதியவர் ஒருவர், மீட்டிங் முடிந்து செல்லும்போதாவது விஜய்யை பார்க்கலாம் என வெகு நேரம் வெளியில் காத்திருந்தார். ஆனால் விஜய் வேறு வழியாக வெளியே சென்றது தெரிந்ததும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். கூட்டத்திற்கு ஆள் சேர்க்க இப்படி செய்கிறீர்களா என்று அந்த முதியவர் கேட்டதும் அங்கிருந்த தவெகவினர் அவரை கடிந்து கொண்டனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத அந்த முதியவர் தொடர்ந்து தனது ஆதங்கத்தை கொட்டினார். தன்னை பற்றிய முழு விவரத்தையும் சொல்லிவிட்டு உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ.. விஜய் வாழ்க, புஸ்ஸி வாழ்க என முடித்தார். அப்போது அவரிடம் தவெகவினர், TVK என்று சொல்லுமாறு கேட்டனர். சொல்ல முடியாது என அந்த முதியவர் மறுத்தும் மீண்டும் வற்புறுத்தியதால் 5,000 ரூபாய் கொடு சொல்கிறேன் என பதிலடி கொடுத்தார். பொதுமக்களுக்கு உள்ளே அனுமதி இல்லை என்றால் அதை நாளிதழில் வெளியிட்டு இருக்க வேண்டும் என கூறி இன்றைய நாளிதழை எடுத்து காட்டியதால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.