விஜய் செயலால் உச்சக்கட்ட ஏமாற்றத்தில் தவெக தொண்டர்கள் | TVK flag launch | TVK Vijay | Actor Vijay
கடைசி வரை தடுமாற்றம்... பதட்டம்... விஜய்க்கு அப்படி என்ன தான் ஆச்சு? பிசுபிசுத்ததா முக்கிய நிகழ்வு? சென்னை பனையூரில் நடந்த விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கொடியை அதன் தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்து வைத்தார். அப்படியே பிரமாண்ட கொடி கம்பத்தில் தவெக கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பிப்ரவரி மாதம் கட்சி பெயரை அறிவித்த பிறகு 6 மாதம் கழித்து நடக்கும் முக்கிய கட்சி நடவடிக்கை இது. சட்டசபை தேர்தலுக்கும் நீண்ட காலம் இல்லை. எனவே தனது தடாலடி அரசியலை இங்கிருந்து விஜய் துவங்குவார்; அனல் தெறிக்க பேசுவார் என்று அவரது தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். நாட்டை உலுக்கிய கொல்கத்தா சம்பவம், தமிழகத்தை அதிர வைத்த கிருஷ்ணகிரி சம்பவம் பற்றியும் ஏதாவது பேசுவார் என்று நினைத்தனர். மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடு, தேசிய, தமிழக அரசியல் நிலை குறித்து தடாலடி விமர்சனங்களை வைப்பார் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் கொடி அறிமுக விழாவில் நடந்த கதை அப்படியே தலைகீழாக இருந்தது. விஜய் யாரையும் விமர்சிக்கவில்லை. எந்த அரசையும் குற்றம் சொல்லவில்லை. எந்த கட்சிகளையும் சாடவில்லை. தனது கட்சியை தாண்டி வேறு எதையும் அவர் பேசவில்லை. கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றியாவது பெரிதாக சொல்வாரா என்று பார்த்தால் அதுவும் இல்லை. நீங்கள் ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கும் முதல் மாநாடு பிரமாண்டமாக இருக்கும் என்று மேலோட்டமாக பூசி மொழுகினார்.