வாசகர்கள் கருத்துகள் ( 1 )
If this info is true, DMK is afraid of this party. DMK is in the correct direction to kill the competitor.
விஜய் காதுக்கு சென்ற அதிர்ச்சி தகவல்: வார் ரூம் அழைத்து எச்சரிக்கை? | TVK Leadership Suspicions | DM
த.வெ.க.,வுக்கு தமிழகம் முழுதும் 120 மாவட்ட செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோர், பொருளாதார வசதி இல்லாதவர்கள். இவர்களை தங்கள் பக்கம் ஈர்க்க திமுக வலைவீசி பார்த்தது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல ஒருவரும் கட்சி மாறவில்லை. இருந்தாலும் டூவீலர்கலில் வலம் வந்த தவெக நிர்வாகிகள் பலர், தற்போது சொகுசு கார்களுக்கு மாறியுள்ளனர். தங்களுக்கு பொறுப்பு வழங்கிய மாநில நிர்வாகி ஒருவருக்கு மாதந்தோறும் ஒரு தொகை அனுப்பி வைக்கின்றனர். சென்னை வரும்போது, சொகுசு ஓட்டல்களில் தங்கி, ஆடம்பரம் காட்டுகின்றனர். அவர்கள், ஆளும்கட்சி அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் வசதி வாய்ப்பு உருவானதாக சொல்கின்றனர் அவர்களுக்கு நெருங்கிய வட்டாரத்தினர். சிலர், பதவி பெற்றுத் தருவதாக கூறி, சொந்த கட்சியினரிடம் பல லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், த.வெ.க., மாவட்டச் செயலர்களுக்கு எதிராக, சொந்த கட்சியினரே, பல்வேறு மாவட்டங்களில், போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து, புகார் தெரிவிப்பதும் அதிகரித்துள்ளது. இதன் பின்னனியில், திமுக இருப்பதாக, த.வெ.க., தலைமை சந்தேகித்து வருகிறது. தேர்தல் நேரத்தில், த.வெ.க., வேட்பாளர்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை இழுக்க, தி.மு.க., தலைமை வியூகம் வகுத்துள்ளது. இதற்காக, சில மாவட்ட செயலர்களுடன், ஆளும் கட்சியினர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இது குறித்த தகவல், ஏற்கனவே கட்சி தலைவர் விஜய் கவனத்திற்கு வந்துள்ளது. தற்போது, மாவட்டச் செயலர்களுக்கு எதிரான போராட்டத்தை துாண்டி, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும், முதல்கட்ட பணிகளை, தி.மு.க., தலைமை துவங்கி விட்டது. இதையறிந்த விஜய், சந்தேகத்திற்கிடமான மாவட்டச் செயலர்களை, அண்மையில், தேனாம்பேட்டையில் உள்ள கட்சியின் வார் ரூமிற்கு அழைத்து, எச்சரித்து அனுப்பியுள்ளார். அடுத்தகட்டமாக ஆளும்கட்சியினருடன் தொடர்பில் உள்ள மாவட்டச் செயலர்களை பதவியில் இருந்து விடுவிக்கவும் திட்டமிட்டு உள்ளார் என தவெக தரப்பில் கூறப்பட்டுள்ளது. #TamilNaduPolitics #TVKParty #DMKAllegations #VijayLeadership #DistrictSecretaries #PartyProtests #PoliticalSuspicions #ElectionStrategy #TVElections #CorruptionClaims #PartyInfighting #YouthWingIssues #MaduraiPolitics #TamilNaduNews #AllianceRumors
If this info is true, DMK is afraid of this party. DMK is in the correct direction to kill the competitor.