அறிவித்தார் விஜய்; கொண்டாட்டத்தில் தொண்டர்கள் | Vijay | Actor Vijai | TVK Political Meeting
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை; என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழக கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டு தேதியை அறிவிப்பதாக கூறியிருந்தோம். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27 மாலை 4 மணியளவில் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. நம்மை வழிநடத்த போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது. தமிழக மக்களின் மனங்களை வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம். விரைவில் சந்திப்போம், வாகை சூடுவோம். என விஜய் கூறியுள்ளார்.