உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஓட்டு வங்கியில் தவெக குறி வைக்கும் மேஜிக் நம்பர் | TVK | TVK Vijay | ECI

ஓட்டு வங்கியில் தவெக குறி வைக்கும் மேஜிக் நம்பர் | TVK | TVK Vijay | ECI

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணிகள் துவங்கி உள்ளது. வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் அடையாள அட்டையில் திருத்த மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், ஏற்கெனவே உள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்தல், ஆதார் எண் இணைப்புக்கும் முகாம்கள் நடத்தப்படுகிறது. இளம் தலைமுறை ஓட்டுகளை குறி வைத்து அரசியலில் இறங்கியிருக்கும் விஜய் வாக்காளர் பட்டியலில் இருந்தே தேர்தல் பணிகளை துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு நடிகர் விஜய் பிரத்யேகமாக சில அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளதாக தெரிகிறது. புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும், வாக்காளர்கள் முகவரி மாறி இருந்தால் அவர்களை கண்டுபிடித்து பட்டியலில் சேர்க்க வேண்டும். பெயர் திருத்தம், சேர்த்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று விஜய் கூறி இருக்கிறார். கட்சி ஆரம்பித்த பின்னர் 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தல் முதல் தேர்தல். இதை சவாலாக ஏற்றுக் கொண்டு நினைத்த இடத்துக்கு வர வேண்டும். வாக்காளர்களின் பெயர்கள், முகவரி மாறி இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும். அந்தந்த பூத்துகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி 18 வயது நிரம்பியவர்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பியவர்களை சேர்க்கும் பணிகளில் ஆயத்தமாகி வருகின்றனர். தமிழக அரசியலை பொறுத்தவரையில் 35 சதவிகிதம் ஓட்டு வங்கி இருந்தால்தான் ஒரு அரசியல் கட்சி ஆட்சியமைப்பதை பற்றி சிந்திக்கவே முடியும் என்கிற கணக்கு உள்ளது. தமிழகத்தில் தமிழ்நாட்டில் ஆறரை கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் நாலரை கோடி பேர் ஓட்டுப் போடுவார்கள். அப்படி எனில் விஜய் தரப்பு ஒன்றரை கோடி ஓட்டுகளுக்கு மேல் வாங்க வேண்டும்.

நவ 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை