உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / அப்பா-மகன் யுத்தம் ஸ்டார்ட்! உதயநிதி செய்தது என்ன? Udhayanidhi deputy CM | MK Stalin vs Udhayanidi

அப்பா-மகன் யுத்தம் ஸ்டார்ட்! உதயநிதி செய்தது என்ன? Udhayanidhi deputy CM | MK Stalin vs Udhayanidi

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். அப்போது, உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுமா, அமைச்சரவை மாற்றப்படுமா என்ற கேள்விக்கு, வெயிட் அன்ட் சீ என்று ஒரு வரியில் பதில் அளித்தார். அமெரிக்க பயணத்தை முடித்து சென்னை திரும்பிய போதும், அதே கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும் என்றார். இதையடுத்து, உதயநிதி துணை முதல்வராவார்; சில அமைச்சர்களும் மாற்றப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை மாற்றம்; துணை முதல்வர் பதவி அறிவிப்பு தள்ளிப்போகிறது. இதற்கு, உதயநிதியின் நிர்பந்தமே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி