உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / முருகன் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றணும் Vanathi Srinivasan | BJP MLA | Statement | Murugan Confe

முருகன் மாநாட்டு தீர்மானங்களை நிறைவேற்றணும் Vanathi Srinivasan | BJP MLA | Statement | Murugan Confe

பாஜ எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முருக பக்தி இலக்கியங்களில் இருந்து மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படும், கோயில்களில் கந்த சஷ்டி பாராயணம் செய்யப்படும், முருக பக்தி இலக்கிய பாடப் பிரிவுகள் ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என முத்தமிழ் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதை வரவேற்கிறோம். அதே சமயம் இந்த தீர்மானங்களுக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்துக்களுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றுவது போல நிறைவேற்றி விட்டு, கூட்டணி கட்சிகள் எதிர்ப்பைக் காரணம் காட்டி, அவற்றை செயல்படுத்தாமல் இருக்க திமுக அரசு போடும் நாடகமோ என்ற சந்தேகம் எழுகிறது. சனாதனத்தை ஒழிக்க மாநாடு போட்டு பேசியவர்கள், இன்று முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துகிறார்கள். இந்துக்களிடம் ஏற்பட்ட எழுச்சியே இதற்கு காரணம். கூட்டணி கட்சிகளின் எதிர்ப்புக்கு அடிபணியாமல் மாநாட்டு தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

ஆக 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ