உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மது ஒழிப்பு மாநாடு சர்ச்சையை மறுக்கும் திருமாவளவன் | Dindigul Srinivasan | Ex minister | Thirumavala

மது ஒழிப்பு மாநாடு சர்ச்சையை மறுக்கும் திருமாவளவன் | Dindigul Srinivasan | Ex minister | Thirumavala

அதிமுக முன்னாள் அமைச்சர் சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றி பேசிய ஒரு கருத்து தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. மதுரையில் நடந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் முழு மது ஒழிப்பை வலியுறுத்தி அக்டோபர் 2ல், கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரிய மாநாடு நடத்தியது. ஜாதியையும், மதத்தையும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் பா.ஜ, பாமக தவிர, அனைத்து கட்சிகளும் மாநாட்டுக்கு வரலாம். ஏன், மது ஒழிப்பு கொள்கையில் உறுதியாக இருப்பர் என்றால், அதிமுகவும் கூட மாநாட்டுக்கு வரலாம் என பகிரங்கமாக அறிவித்தார் திருமாவளவன். அந்த சமயத்தில், தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் ஸ்டாலினை இந்த செய்தி எட்டியதும் அவர் பதற்றமானார். அமெரிக்காவில் இருந்து திரும்பியதும், திருமாவளவனை அறிவாலயம் வரவழைத்துப் பேசினார். மாநாட்டில் அதிமுகவும் கலந்து கொள்ளலாம் என்று பகிரங்க அழைப்பு விடுக்கிறீர்களே! ஆளுங்கட்சி கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்க்கட்சி தலைவருக்கு அழைப்பு விடுத்தால், அது அரசையும், திமுக கூட்டணியையும் எதிர்ப்பது போல் ஆகாதா? என கேட்டுள்ளார். மது விலக்கு விஷயத்தில் யாரெல்லாம் ஆதரவாக இருக்கின்றனரோ, அவர்களை வைத்து நடத்துகிறேன். மது ஒழிப்பில், தி.மு.கவும் உறுதியாக இருக்கும் என்றால், உங்கள் கட்சி சார்பிலும் கலந்து கொள்ளலாம் என திருமாவளவன் கில்லாடியாக பேசியிருக்கிறார். உடனே, அந்த மாநாட்டில் திமுகவும் கலந்து கொள்ளும். ஆனால், அரசுக்கு எதிராக எந்த தீர்மானமும் மாநாட்டில் போடக்கூடாது; தேவையானால், மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போட்டுக் கொள்ளுங்கள் என ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதோடு மாநாட்டுக்கான அனைத்து செலவுகளையும், அமைச்சர்கள் நேரு, வேலு ஏற்றுக்கொள்வர்; செலவு குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறார்.

அக் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ