/ தினமலர் டிவி
/ அரசியல்
/ தடையை மீறி போராடிய அதிமுக: விரட்டி விரட்டி கைது செய்த போலீசார் | vellore | ADMK | Viral
தடையை மீறி போராடிய அதிமுக: விரட்டி விரட்டி கைது செய்த போலீசார் | vellore | ADMK | Viral
வேலூரில் ரூ.198 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு பல்துறை உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன் திறந்து வைத்தார். ஆனால், அம்மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லை; அடிப்படை வசதிகள் கூட இல்லை; மக்களை ஏமாற்றுவதற்காக விளம்பரத்துக்காக அவசர அவசரமாக மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டார்கள் என அதிமுக, பாஜ குற்றம்சாட்டுகின்றன. வேலூர் மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்; போதுமான டாக்டர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
ஜூலை 08, 2025