இஸ்ரேல் தலையில் இடி விழுந்தது போல நடந்த சம்பவம் | Defence Minister | Yoav Gallant | Netanyahu
பாதுகாப்புத் துறை அமைச்சர் யோ கேலண்ட் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, கேலண்ட் இடையே கருத்து முரண்கள் இருந்தது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கையில் நான் முற்றிலும் நம்பிக்கையை இழந்துவிட்டேன் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். காசா போர் நடவடிக்கையின் போது எனக்கு யோ கேலண்ட் மீது நம்பிக்கை இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக அந்த நம்பிக்கை தகர்ந்துவிட்டது. பிரச்னையை சரி செய்ய முயன்றும் முடியவில்லை என நெதன்யாகு தெரிவித்துள்ளார். யோ கேலண்டுக்கு பதில் அந்த பதவியில் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த உத்தரவு வெளியான உடனேயே கேலன்ட் தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.