போர் வெற்றி திட்டம் என்ன? பைடன் - ஜெலன்ஸ்கி சந்திப்பு zelenskyy| victory plan| biden| ukrain war
போரில் ஜெயிப்பது உறுதி உக்ரைனை விட்ர மாட்டோம் ஆயுதங்கள் வழங்கும் USA ரஷ்யா- உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்தித்தார். போரை ரஷ்யா தொடங்கியதில் இருந்து உக்ரைக்கு ஆதரவாக நிற்பதற்காக பைடனுக்கு அவர் நன்றிதெரிவித்த கொண்டார். இந்த சந்திப்பின்போது, போர் வெற்றித்திட்டம் பற்றி பைடனிடம் ஜெலன்ஸ்கி எடுத்துரைத்தார். திட்டத்தை வலுப்படுத்துவது, அணுகுமுறை, ஒருங்கிணைப்பு, அடுத்த கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை பற்றி இருவரும் விவாதித்தனர். ரஷ்யா போரை ஆரம்பித்ததில் இருந்தே உக்ரைனுடன் அமெரிக்க நிற்பதை பாராட்டுவதாகவும், போர் வெற்றிக்கு அமெரிக்காவின் ஆதரவு நம்ப முடியாத அளவுக்கு முக்கியமானது என்றும் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இந்த சந்திப்பு பற்றி பதிவிட்டுள்ள அதிபர் பைடன், போர்க்களத்தில் உக்ரைனை பலப்படுத்துவது; முன்பு இருந்ததை விட உக்ரைனை வலுவானதாக கட்டமைப்பது தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கியுடன் விவாதித்ததாக தெரிவித்துள்ளார். போரில் உக்ரைன் வெல்வது உறுதி. அவர்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் அமெரிக்கா அவர்களுடன் நிற்கும் என டைன் கூறியுள்ளார். அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசையும் அதிபர் ஜெலன்ஸ்கி சந்தித்து போர் வெற்றி திட்டம் பற்றி பகிர்ந்து கொண்டார். முழுமையாக புரிந்து கொண்டு, அமெரிக்காவுடன் முழு ஒத்துழைப்புடன் செயல்படுவது எங்களுக்கு மிக முக்கியமானது என ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட வேண்டும். ரஷ்ய அதிபர் புடினிடம் இருந்து உக்ரைன் மக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு உதவியாக இருக்கும் அமெரிக்காவுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். உக்ரைனுக்கு 8 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், மேலும், 2.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வழங்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.