/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ போதை வழக்கில் ஸ்ரீகாந்தை கஸ்டடியில் எடுக்க போலீஸ் திட்டம் | Actor Srikanth | Drug case | Arrested
போதை வழக்கில் ஸ்ரீகாந்தை கஸ்டடியில் எடுக்க போலீஸ் திட்டம் | Actor Srikanth | Drug case | Arrested
சென்னை நுங்கம்பாக்கத்தில் கொகைன் போதைப்பொருள் விற்றதாக சேலம் சங்ககிரியை சேர்ந்த பிரதீப்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு கொகைன் சப்ளை செய்ததாக ஆப்பிரிக்க நாடான கயானாவை சேர்ந்த ஜான் என்பவரும் ஓசூரில் கைது செய்யப்பட்டார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்தபோது, ஜான் யாருக்கெல்லாம் போதைப்பொருள் சப்ளை செய்தார்? என்ற பட்டியலை போலீசாரிடம் கொடுத்தார். அதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஸ்ரீகாந்தும் இடம்பெற்றிருந்தார்.
ஜூன் 24, 2025