/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ அதிகாலையில் 5 தமிழர்களுக்கு சோக சம்பவம்! | Kerala Lorry | Thrissur | Kerala Police Investigation
அதிகாலையில் 5 தமிழர்களுக்கு சோக சம்பவம்! | Kerala Lorry | Thrissur | Kerala Police Investigation
கேரளா திருச்சூர் அருகே நட்டிகா பகுதியில் சாலையோரம் தமிழர்கள் சிலர் கூடாரம் அமைத்து தூங்கி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் அந்த வழியாக மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீதும் ஏறி இறங்கியது. இந்த கோர சம்பவத்தால் தூங்கி கொண்டிருந்த 2 வயது குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். 11 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
நவ 26, 2024