உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / கண்ணீருடன் நன்றி கூறி பறந்த வங்கதேச தம்பதி | Bangladesh | Elder Susilranjan | Minister Ma. Subramani

கண்ணீருடன் நன்றி கூறி பறந்த வங்கதேச தம்பதி | Bangladesh | Elder Susilranjan | Minister Ma. Subramani

அண்டை நாடான வங்கதேசத்தை சேர்ந்தவர் சுசில் ரஞ்சன் வயது 73. இவரது மனைவி புரோவா ராணி புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற மனைவியை சுசில் ரஞ்சன் சில மாதங்களுக்கு முன் அழைத்து வந்திருந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் வங்கதேசம் செல்ல கடந்த திங்கட்கிழமை பகல் 2 மணிக்கு டாக்கா செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். அன்று காலையே விமான நிலையத்திற்கு இருவரும் வந்தனர். வங்கதேசத்தில் கலவரம் காரணமாக விமான சேவை நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை