உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / மலேசிய பெண் பயணியுடன் சென்னை ஆசாமியும் கைது | Chennai airport | Monkey | Green Lguana | Malasia

மலேசிய பெண் பயணியுடன் சென்னை ஆசாமியும் கைது | Chennai airport | Monkey | Green Lguana | Malasia

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த தனியார் விமான பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். சென்னைக்கு சுற்றுலா வந்திருந்த பெண் பயணி ஒருவர், 2 பெரிய அளவிலான பிளாஸ்டிக் கூடைகள் வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது? என சுங்க அதிகாரிகள் கேட்டபோது, சரியான பதில் சொல்லாமல், மாற்றி மாற்றி பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள், கூடைகளை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள அபூர்வ வகை உயிரினங்கள் இருந்தன. green Lguana எனும் 52 ஆப்பிரிக்க நாட்டு பச்சோந்திகள் 52, ஜியாமங்க் ஜிப்பான் என்ற 4 ஆப்பிரிக்க நாட்டு கருங்குரங்குகளும் இருந்தன. இதையடுத்து அந்த மலேசிய பெண் பயணியை வெளியில் விடாமல் தடுத்து நிறுத்தி, பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனவிலங்குகள் பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். ஏர்போர்ட் வந்த அதிகாரிகள் மலேசிய பெண் பயணியிடம் விசாரணை நடத்தினர். அவர் கடத்தி வந்த உயிரினங்களை வாங்கி செல்வதற்காக, சென்னையை சேர்ந்த ஒரு ஆண், ஏர்போர்ட் வெளியே காத்திருப்பது தெரிந்தது. இருவரையும் கைது செய்தனர்.

அக் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ