பெண் அதிகாரி நிர்மலா முடிவுக்கு காரணம் என்ன?
சென்னை பழவந்தாங்கலை சேர்ந்தவர் நிர்மலா. வயது 59. இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரி. சென்னை விமான நிலையத்தில் டெலிகாம் எனப்படும் தகவல் தொடர்பு துறை சூப்பிரண்டாக பணியாற்றி வந்தார். நேற்று நிர்மலா இரவு பணி பார்த்தார். இவரது அலுவலகம், சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு முனையத்தின் முதல் தளத்தில் உள்ளது. இரவுப்பணி என்பதால் அலுவலகத்தில் அவர் மட்டுமே அமர்ந்து பணிகளை செய்து கொண்டிருந்தார். நிர்மலா இரவு பணிக்கு வந்தால், வழக்கமாக அதிகாலை 4.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்து வெளியில் வந்து ரிலாக்ஸ் ஆவது வழக்கம்.
செப் 06, 2024