உயிர் தப்பிய மெடிக்கல் ஓனர்; சென்னையில் பரபரப்பு சம்பவம் |chennai crime |police | medical shop owner
சென்னை குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 33). குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை அருகே மெடிக்கல்ஸ் நடத்தி வருகிறார்.. சம்பவத்தன்று அசாருதீன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, ஒரு காரில் வந்த கும்பல் திருநீர்மலை பிரதான சாலையில் அவரை வழிமறித்தது. காரில் இருந்து இறங்கிய கும்பல், தாங்கள் போலீஸ் என அசாருதீனிடம் கூறினர். நீ போதை மருந்துக்காக மருந்து பொருட்களை விற்பனை செய்வதாக புகார்கள் வந்துள்ளன. உன்னிடம் விசாரிக்க வேண்டும் வா என மிரட்டும் தொனியில் கூறினர். அசாருதீன் யாருக்கோ போன் போட செல்போனை எடுத்தார். உடனே அந்த கும்பல் அவரை அடித்து இழுத்து காரில் போட்டுக்கொணடு பறந்தது.