உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இரவோடு இரவாக போட்ட ரோடு விடியும்போது கரைந்து போனது |Chennai Rain| Road| Cement Road Washed away

இரவோடு இரவாக போட்ட ரோடு விடியும்போது கரைந்து போனது |Chennai Rain| Road| Cement Road Washed away

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி 14வது மண்டலத்தில் பாலவாக்கம், மணியம்மை தெருவில் நேற்று இரவோடு இரவாக ஒப்பந்ததாரர்கள் சிமென்ட் சாலை போடும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே மழை பெய்து ரோட்டில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், அதன் மேலேயே சிமென்ட் கலவை கொட்டி ரோடு போடத்தொடங்கினர். இதைபற்றி அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டனர். மழையில் சிமென்ட் சாலை அமைத்தால் தாக்குமா? இப்போது போட வேண்டாம் என கூறியுள்ளனர். அதை பொருட்படுத்தாத கான்ட்ராக்டர்கள், அதெல்லாம் சீக்கிரம் காய்ந்துவிடும் எனக்கூறி கடமையே கண்ணாக, சிமென்ட் ரோடு போட்டு விட்டு சென்றனர்.

அக் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை